
நிச்சயம் ஒரு நாள்
நான் வருவேன்
நிம்மதி தருவேன் என
சொல்லும் இறைவன் என
நம்பும் ஆதிக்க மக்களே!
உனக்கும் எனக்கும்
உறவு சாவிப்பூட்ட வந்த
நட்சத்திரங்கள்...
அரை வட்டமாய் நல்லெண்ண
திட்டத்தை உடைக்கும் ஈக்களே!
வெள்ளைப்புறாக்கள்
சமாதனக்கொடியோடு
இரத்தம் சிந்தி இடம் கேட்டது...
இலக்கியத்தில் ஆண்டோம்
இந்தியாவில் ஆண்டோம்
என்று என்ற
இனவாதமெடுக்கும்
உடைந்த ஓடுகள்தெரித்தே!
உலாவிக்கொண்டுள்ளது.....
கங்கை காவிரி
நீரில் பூத்த வெண்தாமரை
ஓடிவரும் யுத்த ரத்த வெள்ளத்தில்
செந்தாமரையாய்...
வெந்து உறைந்தது...
பறக்க விடுவோம்
பாபர்கோட்டையில்
சிவ நாமக்கொடி
அயோத்தி மாநகரில்
அல்லா மலராட்சி புரிவோம்...
வெந்த மனதை
நெய்த சமாதனக்கொடியோடு
பறக்க விடுவோம்....



















