தனிமையில் புலம்பும்
எனது நிழலின் சோகத்தை
பாதச்சூட்டில் தனித்துக் கொள்கிறேன்...
அய்ந்தாம் வகுப்பில்
ஆட்டோவில் சென்றபோது
நெருங்கிநெருங்கி இருந்தும் சொல்லவில்லை....
கடற்கரையில் உலாவச் சென்ற
நன்பரின் அரட்டைப்பேச்சில்
அவளைக்கூறும் போது
இருட்டு உலகமாக்கி கொண்டது இதயம்...
ஒரு நடுராத்திரியில்
மது உண்டு தூங்கிய நண்பனின்
புலம்பலில் தெரிந்தது அவனையும்
அலைக்கழித்திருப்பளோ! என்று...
மழைச்சாரலில் நனைந்த போது
தாவனியின் முந்தானையை தந்தாளே!
தலையில் இட்டுக்கொள்வதற்கு,
என்ன சொல்வதென தெரியாது
நடுங்கியது குளிரில் உள்ளம்...
தென்னைமரத்தினடியில் சோறுண்ட போது
மட்டும்தான் அவளின் டிபன்பாக்ஸில்
நான் இருப்பதைக்கண்டேன்.
சாப்பிட்டு கழுவிட்டு
முகம் பார்க்க சொன்னபோது....
காதலியா? தோழியா
தெரியாமலே இருந்தேன்.
உன்னிடம் மௌனம்காட்டிய
அந்த ஞாபகங்களில்
நெஞ்சை குத்திக்கொண்டே இருக்கின்றன...
நிச்சயிக்கப்பட்டு விட்டபோது
நீ பார்த்த ஏக்கப்பார்வையில் தெரிந்தது
நம்மிடையே வீசிய
தென்றல் இனியும் திரும்புமா என்று?
Wednesday, August 5, 2009
Friday, July 10, 2009
பல மணிமேகலை.....
இறைவன் படைப்பிலே!
வந்த மாற்றமோ!
இடையில் வந்த விழி ரசாயனத்தால்வந்ததோ!
கடும் தவம் தான்பூண்டிருந்தனர்- ஏனையகளைத்தனர்....
ஆனை பசியோ!
அடக்க முடியாததால்தேகத்தில் உணவிட்டு
உண்ணுகின்றனர்.....
எந்த முனிவனும் செய்யாத ஒரு மர்ம முடிச்சை
அவிழ்க்க முனையும் ஒரு அதிசய முனிவனாக வலம் வருகின்றனர்
சாலைத்தெருக்களில்.......
விழியை கழுவி யானைப்பசியை அடக்க பல மணிமேகலைகள் தெருக்களில்
சுயம்வரம் அடுப்புக்குள் தலையை
புதைத்துக்கொண்டுதான்
விறகு எரிக்க முனைகின்றனர்....
எதுவும் புரியாத பெற்றோரின்
மனதில் கிளிசரினை தடவி விட்டு
வாடிக்கையாக தான் தொடருகிறது...
மணி தெரியாமல்
திசைகாட்டும் கடிகாரங்கள்
அல்ல கலங்கரை விளக்குகளாய்
தன் முந்திக்கு படகுகளை வழியனுப்பும் ஓடம்....
நினைத்தால் நிலமை சரியாகிடும் என
நினைக்கும் அண்ணனுக்கு
நிம்மதை கெடுத்து பூபாள ராகத்தில் ஒரு
சோக வேதாந்தமாக அவளின் வாழ்க்கை
பிறருக்கு,....
கிட்டாத அட்சயப் பாத்திரத்துக்கு
அலை பாயும் பல மணிமேகலைகள்
என் கண்ணில்
நிறைகின்றன... தினமும்
பல புனையா ஓவியமாக முச்சந்தியில்...
வந்த மாற்றமோ!
இடையில் வந்த விழி ரசாயனத்தால்வந்ததோ!
கடும் தவம் தான்பூண்டிருந்தனர்- ஏனையகளைத்தனர்....
ஆனை பசியோ!
அடக்க முடியாததால்தேகத்தில் உணவிட்டு
உண்ணுகின்றனர்.....
எந்த முனிவனும் செய்யாத ஒரு மர்ம முடிச்சை
அவிழ்க்க முனையும் ஒரு அதிசய முனிவனாக வலம் வருகின்றனர்
சாலைத்தெருக்களில்.......
விழியை கழுவி யானைப்பசியை அடக்க பல மணிமேகலைகள் தெருக்களில்
சுயம்வரம் அடுப்புக்குள் தலையை
புதைத்துக்கொண்டுதான்
விறகு எரிக்க முனைகின்றனர்....
எதுவும் புரியாத பெற்றோரின்
மனதில் கிளிசரினை தடவி விட்டு
வாடிக்கையாக தான் தொடருகிறது...
மணி தெரியாமல்
திசைகாட்டும் கடிகாரங்கள்
அல்ல கலங்கரை விளக்குகளாய்
தன் முந்திக்கு படகுகளை வழியனுப்பும் ஓடம்....
நினைத்தால் நிலமை சரியாகிடும் என
நினைக்கும் அண்ணனுக்கு
நிம்மதை கெடுத்து பூபாள ராகத்தில் ஒரு
சோக வேதாந்தமாக அவளின் வாழ்க்கை
பிறருக்கு,....
கிட்டாத அட்சயப் பாத்திரத்துக்கு
அலை பாயும் பல மணிமேகலைகள்
என் கண்ணில்
நிறைகின்றன... தினமும்
பல புனையா ஓவியமாக முச்சந்தியில்...
Sunday, January 4, 2009
காற்றோடு தான்... காற்றோடு நான்...

பட்டுப்போன
மரக்கிளைகளின்
சருகுகள்...
தட்டுதடுமாறி
காலில்பட்ட
சருகை எடுத்தேன்...
காகிதமாய் வரலாறு
சொன்னது
சுலோகமாய்
செவியில் நின்னது..
கூலிக்கு மாரடிக்கும்
குடும்பத்தில்
வேலி இடாத வாழ்க்கை...
நடந்து வந்த
நந்தவனத்தின் ஊடே!
சிலசில
சில்லுவண்டிகள்...
கூட்டம்கூட்டமாய்
ஆங்காங்கே!மரத்தடியில்
மணிக்கணக்கில்
காதல் ஒலிகேட்ட
கன மாதங்களில்...
இரண்டு காதலர்களின்
வாழ்வில்
புயல்காற்றாய் எச்சரிக்கை
செய்தி...
கடற்கரை மனதில்
கரைபுரண்ட காதலில்
இங்கு
ஒருவனின் இருதயத்தில்
பள்ளம் விழுந்தது...
பட்டுப்போன மரத்தின்
இலைமட்டும்
பட்டுப்போகாது பனித்துளியால்
கட்டுண்டு வாழ்ந்தது...
ஒருவளின் மனதில் காதல்...
இடையில் வந்து கலக்கும்
ஆறாக
அவளின்
இல்வாழ்க்கையில்
கலப்பதற்கு ஆண் பேரு
அடிபட்டது...
அங்கே!
குயிலின் இதயத்தில்
குண்டுபட்டது..
இரத்தம் கண்ணீர் விட்டது...
சிவக்கும்
வெற்றிலை
வெற்றி இல்லையினு சொல்லி
சுண்ணாம்புக்காதலனை
கூட அழைத்து...
மேற்கு தொடர்ச்சி மலையை
பயமுறுத்தும்
தற்கொலை பாறைக்கு
இரு
உடலும் சேர்ந்தது...
நஞ்சுப்பாலை உண்டு
இரு
உடலும் சோர்ந்தது...
மீதமான காதலை
மட்டும்
காற்றோடு உயிர்வாழ்கிறது...
காற்றோடு தான்...
காற்றோடு நான்...
Subscribe to:
Posts (Atom)

