கண்ணும் கண்ணும் செய்யும் அரசியல்-காதல்;
உயிரும் உடலும் செய்யும் போர் -காமம்;
பட்டாம் பூச்சியின்பார்வையில்
பயணிக்கின்ற காதல் புனிதப்படுகிறது.
மலரின் மவுனமும் அர்த்தப்படுகிறது
சிரிப்பை சுவாசமாக்கி வாழும்
சோலைவனத்தின் புருவத்தில் ஒளிந்துபேசும்
வகிடு எடுத்த கதிரவனின்
காதுகளில் விளாமல் இல்லை
பனித்துளியின் பவ்விய வெட்கம்।
வெறித்துப்போன நிழல்களின்
ஊஞ்சல் மனதில்
காற்றை நிரப்பிக்கொண்டு
கனவில் நுழைந்து
சோலைவாசமெல்லாம்
சேலை நெச நெடியே மிளிர்கின்றன।
ஆனந்தத்தில் குதிக்கின்ற-
எனது கண்கள்
சொல்லிக்கொள்வதில்லை எவரிடமும்।
குழப்பத்தில் மூழ்கி
திகைத்து நிற்கிறஎன்னிதயம்
பேசுவதில்லை
முன்பைப்போல் உன்னிடம்
காரணம் என்னவென்று அறிவாயோ?
Showing posts with label காதல் கவிதை.... Show all posts
Showing posts with label காதல் கவிதை.... Show all posts
Friday, February 18, 2011
Friday, December 10, 2010
மலர்விழி.....!
மலர்விழி
என் கல்லூரி வாழ்க்கையில் என்னை,
என் இதயத்தை பாதித்தவள்.
அவளின் ஒழுக்கமே என்னைக் கவர்ந்தது.
அவள்
மெல்லிய இதழே!
பஞ்சுக்கனி நுதழே !
வாடி
என் காதல் தோட்டத்தில்
கனிரசமாய்....
பனிரசமாய்....
என் கல்லூரி வாழ்க்கையில் என்னை,
என் இதயத்தை பாதித்தவள்.
அவளின் ஒழுக்கமே என்னைக் கவர்ந்தது.
அவள்
மெல்லிய இதழே!
பஞ்சுக்கனி நுதழே !
வாடி
என் காதல் தோட்டத்தில்
கனிரசமாய்....
பனிரசமாய்....
Wednesday, August 5, 2009
திரும்பாத காற்று...
தனிமையில் புலம்பும்
எனது நிழலின் சோகத்தை
பாதச்சூட்டில் தனித்துக் கொள்கிறேன்...
அய்ந்தாம் வகுப்பில்
ஆட்டோவில் சென்றபோது
நெருங்கிநெருங்கி இருந்தும் சொல்லவில்லை....
கடற்கரையில் உலாவச் சென்ற
நன்பரின் அரட்டைப்பேச்சில்
அவளைக்கூறும் போது
இருட்டு உலகமாக்கி கொண்டது இதயம்...
ஒரு நடுராத்திரியில்
மது உண்டு தூங்கிய நண்பனின்
புலம்பலில் தெரிந்தது அவனையும்
அலைக்கழித்திருப்பளோ! என்று...
மழைச்சாரலில் நனைந்த போது
தாவனியின் முந்தானையை தந்தாளே!
தலையில் இட்டுக்கொள்வதற்கு,
என்ன சொல்வதென தெரியாது
நடுங்கியது குளிரில் உள்ளம்...
தென்னைமரத்தினடியில் சோறுண்ட போது
மட்டும்தான் அவளின் டிபன்பாக்ஸில்
நான் இருப்பதைக்கண்டேன்.
சாப்பிட்டு கழுவிட்டு
முகம் பார்க்க சொன்னபோது....
காதலியா? தோழியா
தெரியாமலே இருந்தேன்.
உன்னிடம் மௌனம்காட்டிய
அந்த ஞாபகங்களில்
நெஞ்சை குத்திக்கொண்டே இருக்கின்றன...
நிச்சயிக்கப்பட்டு விட்டபோது
நீ பார்த்த ஏக்கப்பார்வையில் தெரிந்தது
நம்மிடையே வீசிய
தென்றல் இனியும் திரும்புமா என்று?
எனது நிழலின் சோகத்தை
பாதச்சூட்டில் தனித்துக் கொள்கிறேன்...
அய்ந்தாம் வகுப்பில்
ஆட்டோவில் சென்றபோது
நெருங்கிநெருங்கி இருந்தும் சொல்லவில்லை....
கடற்கரையில் உலாவச் சென்ற
நன்பரின் அரட்டைப்பேச்சில்
அவளைக்கூறும் போது
இருட்டு உலகமாக்கி கொண்டது இதயம்...
ஒரு நடுராத்திரியில்
மது உண்டு தூங்கிய நண்பனின்
புலம்பலில் தெரிந்தது அவனையும்
அலைக்கழித்திருப்பளோ! என்று...
மழைச்சாரலில் நனைந்த போது
தாவனியின் முந்தானையை தந்தாளே!
தலையில் இட்டுக்கொள்வதற்கு,
என்ன சொல்வதென தெரியாது
நடுங்கியது குளிரில் உள்ளம்...
தென்னைமரத்தினடியில் சோறுண்ட போது
மட்டும்தான் அவளின் டிபன்பாக்ஸில்
நான் இருப்பதைக்கண்டேன்.
சாப்பிட்டு கழுவிட்டு
முகம் பார்க்க சொன்னபோது....
காதலியா? தோழியா
தெரியாமலே இருந்தேன்.
உன்னிடம் மௌனம்காட்டிய
அந்த ஞாபகங்களில்
நெஞ்சை குத்திக்கொண்டே இருக்கின்றன...
நிச்சயிக்கப்பட்டு விட்டபோது
நீ பார்த்த ஏக்கப்பார்வையில் தெரிந்தது
நம்மிடையே வீசிய
தென்றல் இனியும் திரும்புமா என்று?
Friday, July 10, 2009
பல மணிமேகலை.....
இறைவன் படைப்பிலே!
வந்த மாற்றமோ!
இடையில் வந்த விழி ரசாயனத்தால்வந்ததோ!
கடும் தவம் தான்பூண்டிருந்தனர்- ஏனையகளைத்தனர்....
ஆனை பசியோ!
அடக்க முடியாததால்தேகத்தில் உணவிட்டு
உண்ணுகின்றனர்.....
எந்த முனிவனும் செய்யாத ஒரு மர்ம முடிச்சை
அவிழ்க்க முனையும் ஒரு அதிசய முனிவனாக வலம் வருகின்றனர்
சாலைத்தெருக்களில்.......
விழியை கழுவி யானைப்பசியை அடக்க பல மணிமேகலைகள் தெருக்களில்
சுயம்வரம் அடுப்புக்குள் தலையை
புதைத்துக்கொண்டுதான்
விறகு எரிக்க முனைகின்றனர்....
எதுவும் புரியாத பெற்றோரின்
மனதில் கிளிசரினை தடவி விட்டு
வாடிக்கையாக தான் தொடருகிறது...
மணி தெரியாமல்
திசைகாட்டும் கடிகாரங்கள்
அல்ல கலங்கரை விளக்குகளாய்
தன் முந்திக்கு படகுகளை வழியனுப்பும் ஓடம்....
நினைத்தால் நிலமை சரியாகிடும் என
நினைக்கும் அண்ணனுக்கு
நிம்மதை கெடுத்து பூபாள ராகத்தில் ஒரு
சோக வேதாந்தமாக அவளின் வாழ்க்கை
பிறருக்கு,....
கிட்டாத அட்சயப் பாத்திரத்துக்கு
அலை பாயும் பல மணிமேகலைகள்
என் கண்ணில்
நிறைகின்றன... தினமும்
பல புனையா ஓவியமாக முச்சந்தியில்...
வந்த மாற்றமோ!
இடையில் வந்த விழி ரசாயனத்தால்வந்ததோ!
கடும் தவம் தான்பூண்டிருந்தனர்- ஏனையகளைத்தனர்....
ஆனை பசியோ!
அடக்க முடியாததால்தேகத்தில் உணவிட்டு
உண்ணுகின்றனர்.....
எந்த முனிவனும் செய்யாத ஒரு மர்ம முடிச்சை
அவிழ்க்க முனையும் ஒரு அதிசய முனிவனாக வலம் வருகின்றனர்
சாலைத்தெருக்களில்.......
விழியை கழுவி யானைப்பசியை அடக்க பல மணிமேகலைகள் தெருக்களில்
சுயம்வரம் அடுப்புக்குள் தலையை
புதைத்துக்கொண்டுதான்
விறகு எரிக்க முனைகின்றனர்....
எதுவும் புரியாத பெற்றோரின்
மனதில் கிளிசரினை தடவி விட்டு
வாடிக்கையாக தான் தொடருகிறது...
மணி தெரியாமல்
திசைகாட்டும் கடிகாரங்கள்
அல்ல கலங்கரை விளக்குகளாய்
தன் முந்திக்கு படகுகளை வழியனுப்பும் ஓடம்....
நினைத்தால் நிலமை சரியாகிடும் என
நினைக்கும் அண்ணனுக்கு
நிம்மதை கெடுத்து பூபாள ராகத்தில் ஒரு
சோக வேதாந்தமாக அவளின் வாழ்க்கை
பிறருக்கு,....
கிட்டாத அட்சயப் பாத்திரத்துக்கு
அலை பாயும் பல மணிமேகலைகள்
என் கண்ணில்
நிறைகின்றன... தினமும்
பல புனையா ஓவியமாக முச்சந்தியில்...
Sunday, January 4, 2009
காற்றோடு தான்... காற்றோடு நான்...

பட்டுப்போன
மரக்கிளைகளின்
சருகுகள்...
தட்டுதடுமாறி
காலில்பட்ட
சருகை எடுத்தேன்...
காகிதமாய் வரலாறு
சொன்னது
சுலோகமாய்
செவியில் நின்னது..
கூலிக்கு மாரடிக்கும்
குடும்பத்தில்
வேலி இடாத வாழ்க்கை...
நடந்து வந்த
நந்தவனத்தின் ஊடே!
சிலசில
சில்லுவண்டிகள்...
கூட்டம்கூட்டமாய்
ஆங்காங்கே!மரத்தடியில்
மணிக்கணக்கில்
காதல் ஒலிகேட்ட
கன மாதங்களில்...
இரண்டு காதலர்களின்
வாழ்வில்
புயல்காற்றாய் எச்சரிக்கை
செய்தி...
கடற்கரை மனதில்
கரைபுரண்ட காதலில்
இங்கு
ஒருவனின் இருதயத்தில்
பள்ளம் விழுந்தது...
பட்டுப்போன மரத்தின்
இலைமட்டும்
பட்டுப்போகாது பனித்துளியால்
கட்டுண்டு வாழ்ந்தது...
ஒருவளின் மனதில் காதல்...
இடையில் வந்து கலக்கும்
ஆறாக
அவளின்
இல்வாழ்க்கையில்
கலப்பதற்கு ஆண் பேரு
அடிபட்டது...
அங்கே!
குயிலின் இதயத்தில்
குண்டுபட்டது..
இரத்தம் கண்ணீர் விட்டது...
சிவக்கும்
வெற்றிலை
வெற்றி இல்லையினு சொல்லி
சுண்ணாம்புக்காதலனை
கூட அழைத்து...
மேற்கு தொடர்ச்சி மலையை
பயமுறுத்தும்
தற்கொலை பாறைக்கு
இரு
உடலும் சேர்ந்தது...
நஞ்சுப்பாலை உண்டு
இரு
உடலும் சோர்ந்தது...
மீதமான காதலை
மட்டும்
காற்றோடு உயிர்வாழ்கிறது...
காற்றோடு தான்...
காற்றோடு நான்...
Tuesday, November 25, 2008
கருகமணி விழியாள்

எனக்குள்ளே! கொடுங்கோல் ஆட்சி
புரிந்த
விண்சென்ட்ராணி
பொன் லேண்ட் வேணி
உன்னைப்போல ஒரு கொள்ளைக்காரியயை
கண்டதில்லை
முழித்திருக்கும் போது
எண்ணெய் விட்டுஆட்டுற...
மனக்குழிக்குள்ளே!
உன்னை விட்டு பூட்டுற...
கருகமணி விழிக்குள்ளே!
என்னை வைத்து காட்டுற....
களவாணி போடி
தெரியாம கட்டிய
காதல் கோட்டைக்குள்
கண்மூடிக்கோண்டே! வந்து
திருடிட்டு போய்விட்டாயே!
வாழ்க உன் குலத்தொழில்
என்னிடம் :என் மனம்
ஆளுக உன்னை
எண்ணிதினம்.....
கருகமணி விழியாள?
இல்லை
கருகமணி விழியாழா!
இசைபேசும்
கோதையாயுள்ளதால்...
கண்மூடிக்கனவு........

இரவின் தனிமையில்
நிலாவின் நிழலில்
ந்ட்ச்த்திரகூட்டங்களையும்
வெண்மேகங்களையும்
வர்ணிக்கும் எனக்கு
உன்னோட ஞாபகம்......
இதமான சப்தம் கேட்ட்கும்
இந்த இரவில்
கான மழை பொழிந்து செல்லும்
கவிக்குயிலே!
உன்னோட சப்தம்கேட்கும்
எனக்கு ஆனந்தம்
ஆனந்த பூங்காற்றில்
அலைந்து திரியும் ஆகாய நிலவே!
உன்னுடைய நிழலில்
நான் தூங்கும்போது
தூக்கத்தை மறந்து
உன்னோட ஞாபகம்.......
கலங்காத மனமும்
எடுப்பான திமிரும்
எதையும் சாதிக்கும்
துணிவும்
மொரட்டு தனமான பேச்சும்
புரியாத பாஷையில்
உன்னோட ஞாபகம்.........
இது நான்
நடு இரவில்
நான் தூங்கும் போது
என்னுடைய ஞாபகம்+கனவு
கண்டுகொண்டாயா?
Friday, October 31, 2008
சைவ சிங்கம்...

என்னுள் தூங்கும் சைவ சிங்கத்துக்கு
அப்ப அப்ப புல்போடும் தேவதையோ! நீ
ஒருவளிடம் இருந்து
காத்துக்கொள்ள
ஒருவள் பெயரை போலியாக
உச்சரித்தால்தான் தப்பிக்க
முடியும் போல...
இந்த கவிஞனின் போதை
கண்களில் விதை
பாவிக்கும் மலரடி.. நீ
வர்ணத்தின்
வாசல் படியின் கரையோரம்
புரையோடி ஒதுங்கி நிற்கின்ற எறும்பாய்
உன் இதயத்தில்
ஓர் சிறு
இடத்தில் தங்க இடம் தருவாயா?
ஏட்டு சுரக்காய் அல்ல
நீ
நாட்டு சுரக்காய்...
தடுமாற்றம்

சிங்காரத்தென்னவன்மனதில்ஜீவனாக!
பொங்கிவழிந்துயிர்கலந்தநவவாசனை
மங்காதுநிரம்பியதுஎன் இதயப்பேரன்பே!
அங்கேனுமடைக்கலம்பொத்திபொத்திவைத்த
பாவை பூவடிபெண்ணே!இதயமென்ன நாளும்
சேவைபாவடிபாடும் உனக்காக ...
கார்மேககூந்தலுக்குள்ளே!ஜீவிதமாய்
வேர்விடவேண்டுமடிகண்ணே! வசதியோடு
ஊர்வலம்வர எண்ணாத உன்ரசனைக்கு
சொற்பூக்களால் நித்தம்பூவர்ச்சனைசெய்வேன்
குற்றமிலாவிழிக்கேனசொன்னது என்மனம்
வற்றாத சொற் கேளாததும் விம்மியதேன்?...
பொன்னே!மணியே!பொற்புடையஜீவனாம்சத்து
என்னே!ஏணிய கூற்றின்பவழக்குறைத்து
மண்ணே!வானியநாற்றம்பூத்தேனிதயத்து
கவியே!காணிக்கைநிற்காதுன்னதுடிதுடித்து
செவியே!திணிக்கும்சேலைபெண்ணாம் உன்னைநினைத்து...
அழகு ! பூச்சூடியமலருக்குஜீரணமாகாது
உழவு!
செய்த எனது வசப்பிடியில்:
பழகும்!
நெய்மணத்தரசனைப்பேச்சில்:
கழுவு!
கின்ற கண்ணொத்த காகிதப்பூவல்ல நீ...
அழுகும்!
ஆறாது நிலவு இன்னது தெரியாத பேதையல்ல நீ...
நழுவும்!
மீனிது நழுவாத மீனும் அறியாத கோதையல்ல நீ...
கண்ணாடி பட்டாம்பூச்சி நாள்:19-09-08

என் அன்புகொத்த
இதயப்பூங்காவனமே!
உன் அன்பு வேண்டுகோள்
இன்று எனக்காக...
குடும்பச்சுமைதாங்கிய
கண்ணாடி பட்டாம்பூச்சி
தடுமாறினாலும் தடம்
மாறாத சீதை வழித்தோன்றல்...
உலகத்தில் பல ஓ!-நாய்கள்
ஓலங்கலிட்டாலும் உன்
பலமுள்ள எண்ணத்துக்கு இது
களமெனப்படாதுவோ!...
கடுந்துயில் இரவும்-பெண்ணே!
வழிநெடுக என் தன்னம்பிக்கை கூற்று...
கைரேகை அழிய உழை என்பாரே!
கை அழிய உழைத்த பெண்ணின்
பை நிறையவில்லை என்னகாரணமாம்?
வைகின்றதே!ஏழுலகம் நிலைகண்டு...
ஆரமுதே!
குதித்து வந்த புயல்காற்று
குண்டக்க மண்டக்க உன்
கால்களையே கட்டி தழுவி
சாந்தமாகின்றன...
பெண்ணே!
உன் வரவுக்காக
மேகத்தூரிகைகள்
வரைந்து எடுத்தன உன்
பாத சரிகைக்கு நிகரான
சூரியசெருப்பை...
நவீன உடை வகுத்து எடுக்கும்
சாரைப்பாம்பா!-நீ
தடைகளை உடையாக
கூரை போடுபவள்...
குடும்பச்சுமைதாங்கிய
கண்ணாடி பட்டாம்பூச்சி
தடுமாறினாலும் தடம்
மாறாத சீதை வழித்தோன்றல்...
உன் வரவுக்காக...
சிவப்பு நிலா!..

சிவப்பு நிலா!..
****************
சிரிக்கின்ற
சிவப்பு நிலா!..
வானுலக தேவதை
பூலோகத்தில் யாருக்காக
அவதரித்தாளோ!
அள்ள அள்ள குறையாது
நிரம்பிவழிகின்ற இவளின்
புன்னகை... அட்சய பாத்திரமாய்..
இவளின் கருவிழிக்கு
இமைக் குடை பிடிக்கின்றதே!
என்னை விடவும்
அதிவேகமாக...
காதல் கவிதை...

விழி அழகும்
சிரிப்பு அழகுமே!-உம்
தாவனியில் இழுத்துப்போட்டது என்னை...
விம்மிக்கொண்டு இருக்கும்
சின்ன விழியே!-மெல்லத்
தாயேண்டி செல்லக்கிளியே!...
விட்டுச்செல்லும் என்
சின்னக்காகிதத்
தாள்கூட உன்னைப்பற்றியே!பேசிச் செல்கிறது
விழிச்சிறையில் எனக்கு
சிம்மாசனம் அமைத்து
தாயேன்டி என் காதல் காவலாளி..
தகாத சொல்லை நீக்கி உன்
பார்வையை என் மீது செலுத்தி
வாத்து போலமெல்ல வந்து
பாதி சிரிப்பைஎன்னிடம் காட்டி
போகாத காதலை என்னிதயத்துள் புகுத்தி
பறந்து வந்து முத்தமிட்ட மலரடி நீ..
Subscribe to:
Posts (Atom)

