Friday, October 31, 2008

கண்ணாடி பட்டாம்பூச்சி நாள்:19-09-08


என் அன்புகொத்த
இதயப்பூங்காவனமே!
உன் அன்பு வேண்டுகோள்
இன்று எனக்காக...

குடும்பச்சுமைதாங்கிய
கண்ணாடி பட்டாம்பூச்சி
தடுமாறினாலும் தடம்
மாறாத சீதை வழித்தோன்றல்...

உலகத்தில் பல ஓ!-நாய்கள்
ஓலங்கலிட்டாலும் உன்
பலமுள்ள எண்ணத்துக்கு இது
களமெனப்படாதுவோ!...

கடுந்துயில் இரவும்-பெண்ணே!
வழிநெடுக என் தன்னம்பிக்கை கூற்று...

கைரேகை அழிய உழை என்பாரே!
கை அழிய உழைத்த பெண்ணின்
பை நிறையவில்லை என்னகாரணமாம்?
வைகின்றதே!ஏழுலகம் நிலைகண்டு...

ஆரமுதே!
குதித்து வந்த புயல்காற்று
குண்டக்க மண்டக்க உன்
கால்களையே கட்டி தழுவி
சாந்தமாகின்றன...

பெண்ணே!
உன் வரவுக்காக
மேகத்தூரிகைகள்
வரைந்து எடுத்தன உன்
பாத சரிகைக்கு நிகரான
சூரியசெருப்பை...

நவீன உடை வகுத்து எடுக்கும்
சாரைப்பாம்பா!-நீ
தடைகளை உடையாக
கூரை போடுபவள்...

குடும்பச்சுமைதாங்கிய
கண்ணாடி பட்டாம்பூச்சி
தடுமாறினாலும் தடம்
மாறாத சீதை வழித்தோன்றல்...
உன் வரவுக்காக...

No comments: