Showing posts with label இயற்கை கவிதை. Show all posts
Showing posts with label இயற்கை கவிதை. Show all posts

Tuesday, November 25, 2008

என் பாவமா.....?


ஓராயிரம் நினைவுகளை
சுமந்துகொண்டு
ஓராயிரம் கனவுகளோடு வாழும்
எனக்கு ஒரு வார்த்தை
உனக்கு அது வாழ்க்கை.....

வாழ்க்கையை தேர்ந்து
எடுப்பது உன்னோட குற்றாமா?
இல்லை வானவில்லின்
வர்ணங்களை வர்ணிப்ப‌து
என்னோட குற்றமா?
குற்றங்களை வாழ்க்கையாக கொண்டால்
எல்லாமே! குற்றமே!

காதல் போதையில்
மணிக்கணக்கில்
குடித்து விட்டு மயங்கி
கிடப்பது மானிடரின் குற்றமா?
குடிப்பதற்கு காரணமான
உன்னோட குற்றமா?
குடிமைப்பெண்ணே!‍உன்
கண்பார்வையில் சிக்கி தவிப்பது
என்னோட குற்றமா?
இல்லை

உன் கண்பார்வையில் விழ‌ வைத்தது
உன்னோட குற்றமா? சோகமே! வாழ்க்கையாக
உருவாக்கியது
என்னோட குற்றமா?
இல்லை
சோகத்தையே! வாழ்க்கையாக தந்தது
உன்னோட குற்றமா?யாரயும்
நேசித்து விடாதே!
உனக்கு கண்பார்வையை கொடுத்தது
ஆண்டவன் குற்றமா?
உன் கண்ணூக்குள்ளே!
என் பாவமா.....?

Tuesday, November 4, 2008

இற‌கொடித்த இயற்கை....


சின்னக்சின்னக்குழந்தைகள்
பிற‌க்கும் போது அழுகுரலிலும்
இயற்கை வட்டமிடும் வர்ணசாலையாக...

தென்றலில் தூளிகட்டி
விளையாடும் தூக்கனாங்
குருவிக்கூடும்:_ஆடும்
இயற்கையே! நாடும் நாளும்...

வண்ண வண்ண சட்டை உடுத்தும்
வண்ணத்துப்பூச்சியின்
இற‌கொடித்த முட்களில் இயற்கை...

மழலையின் விளையாட்டு
பொருளான எட்டாத ஓலை,செடி கொடியில்
அமரும்
தட்டானின் வாழ்விலும் இயற்கை...

பட்டாடை உடுத்தும்
வட்ட நிலவும்
கொட்டாவி விடும்
சொட்டுப்பனிதுளியிலும்
இயற்கை...

கட்டை வண்டி போகையிலே!
கேட்கின்ற ஜோடி மாடிகளின்
மணி ஓசையிலும்
எம்மூர் புழுதிகளின் தூற்றலிசையிலும் இயற்கை...

ம‌ந்தை மாடுகளின்
மேய்க்கின்ற் வாயசைவிலும்
கூட்ட‌ம் கூட்டமாக அணிவகுப்பிலும்
முன்னே! செல்கின்றான்....

கள்ளப்பருந்து குஞ்சை கவ்விச்செல்லும் போது
செல்லக்கோழி தாவிக்கொத்த பற‌க்கின்ற விதத்திலும்
இயற்கை...

புள்ளிவைத்து கோலம்
போடதெரியாம ,அழமுடியாம‌
தவிக்கும் நிலா வாழ்விலும் இயற்கை...

துக்கத்திலும் துயரத்திலும்
இயற்கை
சரி நிகர் சாமானமாக‌
இருக்கும் போது ஏன் மானிடா?
இயற்கைக்கு இன்னல் கொடுக்கிறாய்
வெட்டிவீழ்த்துகிறாய்
புகைமூட்டுகின்றாய்...

இய‌ற்கை எல்லாருக்கும்
ந‌ல்ல‌தை செய்யும் போது
எல்லாரும் ஏன் ந‌ல்ல‌தை செய்ய‌க்கூடாது?
செய்து பார்க்க‌லாமே!
வ‌ள‌ம் பெறுவோமே!

இயற்கையின் பயணம்

அலைகடலின்
நெடுந்தூர பயணம்
நீஅழைந்து திரியும் போது
அன்றும்‍‍ உன் நிழல் தேடி...

மணல்வெளியில் நட‌ந்து
செல்லும் போது
உன்
கால்களை உரசிசெல்லும்
அலை இயற்கையின் பயணம்...

தென்றல் அடித்துச்செல்லும்
நீ
நடந்து வந்த பாத‌ச்சுவட்டை
இதுவும் இயற்கையின்
பயணம் ஒருமித்தகணத்தோடு....

கவிபாடும் மேகம்
சுட்டெரிக்கும் பூமி
ஈர்ப்பு சக்தியால்
ஒன்று சேர்க்கும் மழை...

நான் தேடி
அலையும் போது நீ...
வருவது இல்லை
நீதேடி வரும் போது
நான் அணைவதில்லை...

கவிபாடும் மேகங்களையும்
பூமியையும் ஒன்று சேர்க்கும்
பயணமாக புறப்படும் மழையே!
இயற்கையின் காதல் பயணம்...

மேகம் பூமி
இருவரின் மனதிலும்
நிலையாக வாழ்ந்திட
நீ வரும் பாதையெல்லாம்...

பிஞ்சுக்குழ ந்தையின்
பஞ்சுவிரல் பட்ட தடத்திலே!
இணையும் இவ்வுலகம்
இயற்கயின் பயணம் தொடரும்....