Tuesday, November 4, 2008

இயற்கையின் பயணம்

அலைகடலின்
நெடுந்தூர பயணம்
நீஅழைந்து திரியும் போது
அன்றும்‍‍ உன் நிழல் தேடி...

மணல்வெளியில் நட‌ந்து
செல்லும் போது
உன்
கால்களை உரசிசெல்லும்
அலை இயற்கையின் பயணம்...

தென்றல் அடித்துச்செல்லும்
நீ
நடந்து வந்த பாத‌ச்சுவட்டை
இதுவும் இயற்கையின்
பயணம் ஒருமித்தகணத்தோடு....

கவிபாடும் மேகம்
சுட்டெரிக்கும் பூமி
ஈர்ப்பு சக்தியால்
ஒன்று சேர்க்கும் மழை...

நான் தேடி
அலையும் போது நீ...
வருவது இல்லை
நீதேடி வரும் போது
நான் அணைவதில்லை...

கவிபாடும் மேகங்களையும்
பூமியையும் ஒன்று சேர்க்கும்
பயணமாக புறப்படும் மழையே!
இயற்கையின் காதல் பயணம்...

மேகம் பூமி
இருவரின் மனதிலும்
நிலையாக வாழ்ந்திட
நீ வரும் பாதையெல்லாம்...

பிஞ்சுக்குழ ந்தையின்
பஞ்சுவிரல் பட்ட தடத்திலே!
இணையும் இவ்வுலகம்
இயற்கயின் பயணம் தொடரும்....

No comments: