Showing posts with label சமூகம் கவிதை.... Show all posts
Showing posts with label சமூகம் கவிதை.... Show all posts

Tuesday, December 2, 2008

டிசம்பர் 6




நிச்சயம் ஒரு நாள்
நான் வருவேன்
நிம்மதி தருவேன் என
சொல்லும் இறைவன் என‌
நம்பும் ஆதிக்க மக்களே!


உனக்கும் எனக்கும்
உறவு சாவிப்பூட்ட வந்த‌
நட்சத்திரங்கள்...
அரை வட்டமாய் நல்லெண்ண‌
திட்டத்தை உடைக்கும் ஈக்களே!


வெள்ளைப்புறாக்கள்
ச‌மாதனக்கொடியோடு
இரத்தம் சிந்தி இடம் கேட்டது...


இலக்கியத்தில் ஆண்டோம்
இந்தியாவில் ஆண்டோம்
என்று என்ற‌
இனவாதமெடுக்கும்
உடைந்த ஓடுகள்தெரித்தே!
உலாவிக்கொண்டுள்ளது.....

கங்கை காவிரி
நீரில் பூத்த வெண்தாமரை
ஓடிவரும் யுத்த ரத்த வெள்ளத்தில்
செந்தாமரையாய்...
வெந்து உறைந்தது...

பறக்க விடுவோம்
பாபர்கோட்டையில்
சிவ நாமக்கொடி
அயோத்தி மாநகரில்
அல்லா மலராட்சி புரிவோம்...
வெந்த மனதை
நெய்த சமாதனக்கொடியோடு
பறக்க விடுவோம்....

Tuesday, November 25, 2008

உயர்வான'தாய்'


எரிந்து கொண்டே!
பிறர் வாழ்வில்
ஒளிகொடுக்க்ம்
ந‌ட்சதிரங்களாய் நாமும்
பிரகாசிப்போம்....

நீர்த்து உருகி
பிற்ருக்கு இருள்
விரட்டும்
மெழுகாய் நாமிருப்போம்...

தான் அழுது ஒழுகும்‍பின்
உழுவும் நழுவும் மீனும்
வாழ உதவும்
மழையாய் நாம் பொழிவோம்.....
உயர்வான'தாய்'
ஆவோம்...

வ‌த‌'இந்தி'




சிந்தனை தீர்த்தக்கரைக்கு
செவிப்பேருந்திலே!
நெடு நாளாக‌
பயணத்தொகை கொடுக்காது
பயண‌மாகிக் கொண்டே!தான்
வதந்தி...

சில சோதனையாள்ர்கள்
சில வேதனைச்சேவகர்கள்
பல சாதனைபாவகர்கள்
பலவாதனை போதகர்கள்
செய்யும் தொழில்களாக‌வே!
பார்க்கும் இட‌ ந்தோறும்
பிடிபடுகின்ற‌ன‌
ப‌ய‌ண‌ச்சீட்டை காட்டாத‌
ப‌ய‌ணி.....

ஆனாலும்
திருந்த‌வோ!
திருத்த‌வோ!‍இன்னும் ப‌ல‌
திருவ‌ள்ளுவ‌ர் வ‌ந்தாலும் ஆகாது
போல‌
நெடு நாளாக‌ எம‌தூரில்
போற்றப்ப‌ட்ட‌ தேசிய‌மொழியாக‌ எண்ணிஅ தாலோ!
வத 'இந்தி' ப‌ல‌ருக்கு
வேத‌ வ‌ந்தியாக‌
உள்ள‌து....

Monday, November 3, 2008

உண்மைக்கான மந்திரங்கள்...


கோபபட்ட காதல் வாழ்க்கையெல்லாம்
கிழிக்கப்பட்ட ஓவியங்கள்
ச‌ந்தப்பட்ட காதல் வாழ்க்கையெல்லாம்
போற்றப்பட்ட காவியங்கள்

உழைக்காத நண்பரெல்லாம்
மக்கிபோன அமில உரங்கள்
பழக்கப்பட்ட உற‌வுகளெல்லாம்
பாசமான பைத்தியங்கள்
சமத்துவ போதிகளெல்லாம்
பிணி நீக்கும் வைத்தியங்கள்

கிறப்பட்ட இதயமெல்லாம்
எதிரொலிக்கும் கட்டிடங்கள்
போற்றப்பட்ட மனிதரெல்லாம்
வேண்டப்பட்ட விரோதங்கள்

பெற்றெடுத்த அன்னைகளெல்லாம்
இறக்கப்பட்ட கொடிக்கம்ப‌‌ங்கள்
பாதுகாத்த தன ந்தைகளெல்லாம்
தேய்ந்துபோன இயந்திரங்கள்
கற்றுகொடுத்த‌ ஆசான்களெல்லாம்
களையெடுக்கும் வயலகங்கள்

பித்துபிடித்த தெய்வமெல்லாம்
ஏமாற்றும் தந்திரங்கள்
பிறருக்காக வாழ்பவரெல்லாம்
உண்மைக்கான மந்திரங்கள்...

மண்வாசக்கடிதம்...


கால் நீட்டியவாறு
தூங்கி கொண்டிருக்கும்
எமதூரில் பல வண்டிகள்...

எத்துணையெத்துணை பந்தயங்களில்
வெற்றிவாகை சூடிய நான்
வெறும் பார்வை பொருளாக மரத்தடியில்...

இடம் மாற்றிகொண்டு செல்ல‌
உதவிய என் குடும்பம்‍ இன்று
இடமே! தெரியாத நிலையில்...

குயவனின் கைப்பட்டு
குடங்கள் பல தொடுத்தேன்
கை இல்லாத நாங்கள்...

ரணங்களுக்கும் பிணங்களுக்கும்
அவசிய ஊர்தியின் சொந்தங்கள்....

மனிதன் கண்டுபிடித்த‌
கற்கால பொருளான் எனக்கு
தற்காலத்தில் முடக்கப்பட்ட பொருளாக...

ஆனாலும்
எனது
தடங்களையே இன்று
வரலாற்று ஏடுகளாய் வகை செய்கின்றது
மனிதவாழ்க்கையை...

குதிரை,மாடுகளின் நகர்ந்து
செல்லும் வீடுகள் நாங்கள்;
வைக்கோல்,குடிசை,தகரங்கள்
குடில் பல எங்களுல் ஒற்றுமையாக...

விசுவாசமில்லாத மனிதர்கள் இலாவிட்டாலும்
புலுதிக்காற்றை தூற்றிய வண்டிகளின் பின்னே!
வாலாட்டிக்கொண்டே! நன்றி நாய்கள்!!
மற‌ந்தனர் ம‌னித‌ர்க‌ள்....

Friday, October 31, 2008

உடைந்த முகம்


குஞ்சம் சொருகிய
இடுப்பிலே!
நழுவிக்கொண்டே இருந்த கைக்குழந்தை...

அம்மாவின் பசியை அறியாது
அவளின் அடிவயிரை தடவியவாறே!
வருமைச்சிறுமி...

மார்போடு அனைக்கவேண்டிய
குழந்தையன்றி
குப்பை'பை' சுமந்த பாசத்தாய்...

அழுக ஆரம்பித்தகுழந்தைக்கு
உடைந்த கண்ணாடி பாட்டில்களின்
உரசல் சத்தமே! இசைப்பாடலாய்...

தன் பசி மறைத்து-குப்பைத்
தொட்டியில் எடுத்த போட்டோவை
கொடுத்து பொய்ப்புன்னகை காட்டிய
தாயவள்...

சாலையோரத்து
உணவக விடுதின்
எச்சித்தொட்டி அருகே!
ஏக்கத்தோடு நாய்களை விரட்டியபடியே!
வீரத்தாய்...

பழங்கால மரத்தடியில்
பசியார உட்கார்ந்தது போது
விரும்பாத தென்றல் புயலாய் வந்து
மண்ணை தூவி இரைத்தது...

தன் பிஞ்சுக்கு பால்
கொடுக்கும் பரிதவிப்பிலேயே!
தாயின் எண்ணம் அலையுது...

எதுவுமே!தெரியாத கைக்குழந்தை
கையிலிருந்த
பழைய உடைந்த அன்னை தெரசாவின்முகத்தைப்பார்த்த
படியே திரியுது... (பயணம்-செப்)